1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 21 ஜூன் 2023 (18:37 IST)

விஜய் பிறந்த நாளில் ‘லியோ’ பர்ஸ்ட்லுக் போஸ்டர்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்திற்குள் முழுமையாக முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் நாளை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தில் இடம்பெற்ற நான் ரெடி என்ற பாடல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது என்பதும் இந்த பாடலை விஜய் அனிருத் மற்றும் அசல் கோலார் ஆகிய மூவரும் பாடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு லியோ படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் வெளியாக இருப்பதாக லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
இதனை அடுத்து நாளை பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் சிங்கிள் பாடல் என இரண்டு அப்டேட்டுகள் ‘லியோ’ படத்திலிருந்து வருவதால் விஜய் ரசிகர்களுக்கு இராட்டிற்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
 
Edited by Mahendran