புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 18 மே 2019 (14:13 IST)

பூமிக்கடியில் இயற்கையாக அணை: அதுவும் சென்னையில்...!!!

மீஞ்சூரில் இருந்து காவேரிப் பாக்கம் வரை சுமார் 80 கிமீ நீளத்துக்கு பூமிக்கடியில் இயற்கையாக அணை உள்ளதாம்.
 
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இருந்து வேலூர் மாவட்டம் காவேரிப் பாக்கம் வரை சுமார் 80 கிலோ மீட்டர் நீளத்துக்கு பூமிக்கடியில் இயற்கையாக அமைந்துள்ள அணை போன்ற அமைப்பில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நிரப்பினால், சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு தேவையான குடிநீரும், விவசாயத்துக்கான தண்ணீரும் தாராளமாகக் கிடைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 
 
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும், வட கிழக்கு பருவமழையும் இயல்பை விட குறைவாகப் பெய்ததால், ஏரிகள், குளங்களில் தண்ணீர் இருப்பு மிகவும் குறைந்துவிட்டது. பல நீர்நிலைகள் வறண்டுவிட்டன. சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அரசு அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் நிறுவனம், கொசஸ்தலை ஆறு, பாலாறு, ஆரணி ஆறு உள்ளிட்ட ஆறுகளை 6 ஆண்டுகள் ஆய்வு செய்து 1987-ம் ஆண்டு தமிழக அரசுக்கு பரிந்துரையாக ஓர் அறிக்கை அளித்தது.
 
இந்த ஆய்வின்போது, திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே கொசஸ்தலை ஆறு முகத்துவாரத்தில் இருந்து வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை ஒட்டிய காவேரிப்பாக்கம் வரை சுமார் 80 கிலோ மீட்டர் நீளத்துக்கு பூமிக்கடியில் இயற்கை யான நீண்ட கால்வாய் வடிவில் அணை அமைந்திருப்பது (Buried Channel) கண்டறியப்பட்டது. 
 
இந்த இயற்கையான அணையை வளப்படுத்தினால் வட தமிழகத்தின் தண்ணீர் தேவை பெருமளவு பூர்த்தி செய்யலாம் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.