Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிராமணர்களுக்கு நலவாரியம் வேண்டும் – சட்டசபையில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ கோரிக்கை !

Updated: சனி, 20 ஜூலை 2019 (11:21 IST)
சட்டசபையில் நேற்று பேசிய முன்னாள் போலீஸ் அதிகாரியும் மயிலாப்பூர் எம்.எல்..வுமான நட்ராஜ் பிராமணர்களுக்குத் தனியாக வாரியம் அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

சட்டசபையில் கடந்த சில நாட்களாக காவல்துறையின் மானியக்கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதில் நேற்றுப் பேசிய முன்னாள் காவல் அதிகாரியும் தற்போதைய மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான நட்ராஜ் பிராமணர்களுக்கு என தனியாக நலவாரியம் அமைக்க வேண்டுமெனக் கூறினார்.

அவர் ‘மயிலாப்பூர் தொகுதி வாழ் பிராமணர்கள் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா அமைத்தது போல் பிராமணர்களுக்கென தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறார்கள். ஏற்கனவே அமைக்கப்பட்ட அர்ச்சகர்கள் ,கிராம பூசாரிகளுக்கு நலவாரியங்கள் சிறப்பாக செயல்படவும் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை அரசின் கனிவான கவனத்திற்கும் பரிசீலனைக்கும் வைக்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

எனக்கு சுகர்!... வேதனையா இருக்கு!.. சட்டசபையில் ஓபிஎஸ் வைத்த கோரிக்கை!...

விஜய் இருக்கும்வரை உங்க தலைவர் வரமாட்டார்!.. சட்டசபையில் காரசார வாக்குவாதம்!..

சாம் ஆல்ட்மேனின் வலது கரமாக கருதப்படும் முக்கிய அதிகாரி விலகல்.. ஓபன்ஏஐ' நிறுவனத்திற்கு பின்னடைவா?

இளைஞரை அறைந்த எஸ்.ஐ!.. திருப்பி அறைந்த இளைஞர்!.. விசிக போராட்டத்தில் பரபரப்பு!. (வீடியோ)..

முதல்வர் வரும் போது எழுந்து நிற்கவேண்டுமா?!.. சட்டமன்ற விதி சொல்வது என்ன?...

அடுத்த கட்டுரையில்
Show comments