செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 13 ஜூலை 2019 (14:01 IST)

தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்களே இல்லை- சட்டசபையில் சரோஜா சர்ச்சை பேச்சு

சமீப காலமாக அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி நெட்டிசன்கள் இடையே ட்ரெண்ட் ஆவது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் ட்ரெண்டிங் அமைச்சர்கள் பட்டியலில் அடுத்ததாக இணைந்திருக்கிறார் சரோஜா.

நேற்று சட்டசபையில் பேசிய திமுக எம்.எல்.ஏ கீதா ஜீவன் “திமுக ஆட்சியில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்காக 9.55 ஏக்கர் பரப்பளவில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையமும் அமைக்கப்பட்டது. ஆனால் இப்போது அந்த மையம் மூடப்பட்டு கிடக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன் ”தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்கள் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காகதான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இலவச அரிசி, அம்மா உணவகம் போன்ற திட்டங்களை தொடங்கினார். மறுவாழ்வு மையத்தில் பிச்சைக்காரர்களை அடைத்து வைத்தால் அவர்கள் சுவரேறி குதித்து சென்று விடுகிறார்கள்” என்றார்.

பிறகு பேசிய அமைச்சர் சரோஜா “தெரு ஓரம் இருப்பவர்கள் எல்லாம் பிச்சைக்காரர்கள் கிடையாது. கையேந்தி உதவி கேட்போரே பிச்சைக்காரர்கள். அவர்களை போலீஸார் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தாலும், அவர்கள் சம்மதம் இல்லாமல் அவர்களை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பமுடியாது. மறுவாழ்வு மையத்திற்கு யாரும் முன்வராததை பார்த்தால் தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்களே இல்லை என்று தெரிகிறது” என்றார்.

தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்களே இல்லை என்று அமைச்சர் சரோஜா பேசியதும் சட்டசபையில் மெல்லியதாக சிரிப்பு எழுந்தது.