தப்லீக் ஜமாஅத் கோரிக்கை வன்மையாக கண்டிக்கதக்கது: பாஜக பிரபலம் நாராயண் திருப்பதி
தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் கலந்து கொண்ட வெளிநாட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றின் மூலம் கோரிக்கை ஒன்றை அரசுக்கு விடுத்துள்ளது. இந்த அறிக்கைக்கு தனது டுவிட்டரில் பதில் கூறிய பாஜக பிரபலம் நாராயண் திருப்பதி கூறியதாவது:
தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் கலந்து கொண்ட வெளிநாட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் முறையாக விசா பெற்று மத்திய அரசு அனுமதியோடு வந்துள்ளார்கள் என்றும் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சுற்றுலா விசாவில் மட்டுமே இவர்கள் இந்தியாவிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது என்பதும், இந்தியாவிற்குள் வருபவர்கள் ஆன்மீக கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாது என்பதும் இந்தியாவிற்குள் வருபவர்களுக்கு மத போதகம் செய்வதற்கோ அல்லது மத பிரச்சாரம் செய்வதற்கோ உரிமையில்லை என்பதும், அப்படி செய்வது சட்ட விரோதமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படி செய்வது மோசடி மற்றும் மிக பெரிய குற்றம் என்பதே சட்டம். அப்படியிருக்கையில் சட்டத்திற்கு விரோதமாக இது போன்ற கோரிக்கையை விடுத்திருப்பதே குற்றம்.
"இவர்களால் உலகம் முழுவதும் எந்த விதமான சர்ச்சையோ, பதட்டமோ இதுவரை எங்கும் ஏற்பட்டதாக ஒரே ஒரு நிகழ்வுகூட இல்லை" என்றும் அந்த அமைப்பினர் கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது. உலகம் முழுவதும் தப்லீக் ஜமாஅத் அமைப்பு, அடிப்படைவாத சிந்தனைகளேயே பரப்பி வருகிறது என்றும் இதன் அமைப்பை சேர்ந்த பலருக்கு பல்வேறு நாடுகளில் நடைபெற்ற சில பயங்கரவாத செயல்களில் தொடர்பிருந்ததும் நிரூபிக்கப்பட்ட நிலையில்,அந்த அமைப்புக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது. மேலும் சில நாடுகளில் தப்லீக் ஜமாஅத் அமைப்பு அதன் நடவடிக்கைகளுக்காக தடை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பல்வேறு குற்றவியல் சட்டங்களின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்ற நிலையில், இவர்களுக்காக பரிந்து பேசுவதும் சட்டப்படி குற்றம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்
இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.