திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 10 ஜூன் 2022 (21:28 IST)

அண்ணாமலையை அழித்துவிடுவேன் என்று மிரட்டுவதா? நாராயணன் திருப்பதி கண்டனம்

tirupathi
பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை அழித்து விடுவேன் என்று மிரட்டுகிறார் அமைச்சர் தா மோ அன்பரசன் என  நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
குன்றத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலைராஜனோ, அண்ணாமலையின் கரங்கள் இருக்காது என்று ஓலமிடுவதோடு, அவரின் பிறப்பு குறித்து தரக்குறைவாக பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 
 
மொத்தத்தில் தி மு க கும்பல் அண்ணாமலையை கண்டு அஞ்சி நடுங்கி கொண்டிருக்கிறது. பயத்தில் உளறி கொண்டிருந்தாலும், வன்முறையை தூண்டும் விதத்தில் பேசும் தி மு கவினரை, அக்கட்சியின் தலைவராக கண்டிக்காவிட்டாலும், தமிழகத்தின் முதல்வராக திரு. ஸ்டாலின் அவர்கள் கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவரின் கடமை. 
 
அவரின் மௌனம் நீடித்தால் இந்த மிரட்டல்களை அவர் ஆதரிக்கிறார் என்பதோடு அவரின் சம்மதத்தின் பேரிலேயே இந்த மிரட்டல்கள் நடைபெறுகின்றன என்றே பொருள் தரும். சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய முதல்வர் சட்ட ஒழுங்கு சீர்கேட்டிற்கு துணை போகலாமா? 
 
நிர்வாகமின்மையின் காரணமாக மாநிலத்தின் சட்ட ஒழுங்கை சீர்குலைக்க ஆளும் கட்சியினரே முயற்சிப்பது விந்தையாக உள்ளது.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் மீதான கொலை மிரட்டல்களை விடுத்த அமைச்சர் அன்பரசன் மற்றும் கலைராஜன் ஆகியோர் மீது தமிழக காவல்துறை  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.