இங்கயே செஸ் விளையாடலாம் போல..! செஸ் பலகையான நேப்பியர் பாலம்!
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெற உள்ள நிலையில் நேப்பியர் பாலம் அலங்கரிக்கப்பட்டுள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது.
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்விற்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொள்ள வரும் பல நாட்டு வீரர்கள், வீராங்கனைளுக்கும் உணவு, தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்டவற்றை மேற்கொள்ள தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தீம் சாங்கை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தயாரித்துள்ளார். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதை சிறப்பிக்கும் விதமாக சென்னையில் உள்ள பிரபலமான நேப்பியர் பாலத்தில் செஸ் பலகையில் உள்ளது போல வெள்ளை, கருப்பு கட்டங்கள் வரைந்து அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.