ரஜினி ரசிகர்கள் எல்லாம் கிழவனாகிடாங்க... நாஞ்சில் சம்பத் நக்கல்!
ரஜினி ரசிகர்கள் எல்லாம் என் வயதைத் தாண்டியவர்கள், அவர்களால் என்ன செய்ய முடியும் என நக்கலடித்துள்ளார் நாஞ்சில் சம்பத்.
கட்சி தொடங்குவது உறுதி என்று ரஜினிகாந்த் உறுதியளித்த பிறகு தனது பட வேலைகளை தொடர்ந்து கவனித்து வந்தார். இந்நிலையில் இன்று மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார் ரஜினிகாந்த்.
2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒரு மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் கட்சி குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஜினி, கமல் அரசியல் குறித்து நாஞ்சில் சம்பத் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, கமல் அரசியல் வருகை என்ன என்பது நமக்கு ஏற்கெனவே தெரிந்துவிட்டது. மய்யம் இப்போது மையத்தில் நிற்கிறது.
அதேபோல ரஜினி வருகை தமிழ்நாட்டில் எந்த ரசாயன மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ரஜினி ரசிகர்கள் எல்லாம் என் வயதை தாண்டியவர்களாக உள்ளார்கள். இனி அவர்களால் என்ன செய்ய முடியும், ஒன்றும் செய்ய முடியாது என்று நக்கலடித்துள்ளார்.