1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: புதன், 4 மார்ச் 2020 (17:29 IST)

கமல்ஹாசனின் மய்யம் உலகிலேயே கிடையாது - முத்தரசன் ’கிண்டல் ‘

கமல்ஹாசனின் மய்யம் உலகிலேயே கிடையாது - முத்தரசன் ’கிண்டல் ‘

மய்யம் என்ற கொள்கை குறித்து பரிசீலனை செய்தால் கூட்டணி குறித்த்  பேசலாம் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
 
நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். அதன்பிறகு மக்களவை தேர்தலில் பங்குபெற்று குறைந்த சதவீதம் ஓட்டுக்களை பெற்றார். 
 
இனி அடுத்த வருடம் வரவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில், மக்கள் நீதி மய்யம் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அவருடன் கூட்டணி தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இதையே நடிகர் கமல்ஹாசனும், ரஜினியும் தெரிவித்தனர். 
 
இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ் கட்சியை சேர்ந்த முத்தரசன், மய்யம் என்ற கொள்கை உலகிலேயே கிடையாது என தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, இடதுசாரி, வலதுசாரி என்ற 2 கொள்கைகள் மட்டுதான் உள்ளன. கமல்ஹாசன் கூறும் மய்யம் என்ற கொள்கை உலகிலேயே கிடையாது என தெரிவித்துள்ளார்.