Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைத்ரேயன் மனதில் நில நடுக்கம் - மீண்டும் நாஞ்சில் சம்பத்

Written By Murugan
Updated: செவ்வாய், 21 நவம்பர் 2017 (16:22 IST)
துணை முதல்வர் மற்றும் கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கொடுக்கப்பட்டவுடன், தர்ம யுத்தத்தை ரத்து செய்து விட்டு எடப்பாடி பழனிச்சாமி அணியில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார் ஓ.பி.எஸ். ஆனால், கட்சி மற்றும் ஆட்சி இரண்டிலுமே அவருக்கு சரியான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 


 

அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மட்டத்தில் செயல்பட ஓ.பி.எஸ்-ஐ எடப்பாடி பழனிச்சாமி விடுவதில்லை. மேலும், அனைத்து இடங்களிலும் எடப்பாடியே முன்னிறுத்தப்படுகிறார். முக்கிய ஆலோசனகள் அனைத்தும், எடப்பாடி தலைமையில் ஓ.பி.எஸ் இல்லாமலேயே அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் நடந்து வருகிறது. இதனால் ஓ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  
 
இந்நிலையில், ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவாளரான அதிமுக எம்.பி. மைத்ரேயன் தனது பேஸ்புக் பக்கத்தில் “ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?” என ஒரு பதிவை இட்டுள்ளார். இதன் மூலம், இரு அணிகளுக்கும் இடையே இன்னும் புகைச்சல் நீடிக்கிறது என்பதை அவர் உறுதி படுத்தியுள்ளார்.  
 
எனவே, ஓ.பி.எஸ் மீண்டும் எடப்பாடி அணியில் இருந்து பிரிந்து தர்ம யுத்தத்தை மீண்டும் தொடங்குவார் என அவரின் ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
 
இந்நிலையில், தினகரனின் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் இதுபற்றி கருத்து தெரிவித்த போது “ மைத்ரேயன் மனதில் 6.5  ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது” எனக் கிண்டலாக கருத்து தெரிவித்தார்.

எல்லாம் காட்டு

வெவ்வேறு பெயரில் 94 போலி PF கணக்குகள்.. 19.33 கோடி ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு..

தமிழக முதல்வர் விஜய் பெங்களூர் வருகை தரும் நாளில் பந்த்.. கன்னட அமைப்புகள் திட்டமா?

ஜந்தர் மந்தர் போராட்டம்.. பிரதமர் குறித்து அவதூறு பேச்சு.. 25 வயது பெண் மீது கிரிமினல் வழக்கு...

பாஜகவில் சேருமாறு என்னை மிரட்டுகிறார்கள்!.. CJP அபீஜித் தீப்கே புகார்..

விஜய் கர்நாடகம் வருகிறார்.. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டிய முதல்வர் டிகே சிவகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments