திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 9 நவம்பர் 2017 (07:26 IST)

அரசியல் உள்நோக்கத்தில் வருமானவரி சோதனை: நாஞ்சில் சம்பத்

சென்னை ஜெயா டிவி அலுவலகத்தில் இன்று காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயா டிவி மட்டுமின்றி அதனை சார்ந்த நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது


 


ஜெயா டிவி நிர்வாக பொறுப்பை தொடக்கத்தில் டிடிவி தினகரனனின் மனைவி அனுராதா கவனித்து வந்தார். அதன் பின்னர் இளவரசியின் மகன் விவேக், தற்போது ஜெயா டி.வி. நிர்வாக பொறுப்பை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விவேக் நிர்வகித்து வரும் நமது எம்ஜிஆர் பத்திரிகை, அவருக்கு சொந்தமான ஜாஸ்சினிமாஸ் ஆகியவற்றிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாக கூறப்பட்டாலும் இந்த செய்தி உறுதி செய்யப்படவில்லை

இந்த வருமான வரித்துறை சோதனை குறித்து தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் கூறியபோது, 'அரசியல் உள்நோக்கத்திலேயே வருமானவரி சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த சோதனையால் நாங்கள் அதிர்ச்சி அடையவில்லை என்றும் கூறினார்.