சென்னையில் நம்ம ஊரு திருவிழா! அனுமதி இலவசம்! – அமைச்சர் தங்கம் தென்னரசு!
தமிழக அரசு சார்பில் தமிழக நாட்டுப்புற கலைகளை வளர்க்கும் விதமாக “நம்ம ஊரு திருவிழா” என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழக பண்பாடு மற்றும் நாட்டுப்புற கலைகளை மக்களிடையே கொண்டு செல்லும் விதமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் “நம்ம ஊரு திருவிழா” என்ற விழா கொண்டாடப்படும் என முன்னதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன் முதற்கட்டமாக மார்ச் 21ம் தேதியன்று மாலை 6 மணிக்கு சென்னை தீவுத்திடலில் நம்ம ஊரு திருவிழா நடைபெறும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இந்த விழாவில் நிகழ்ச்சியில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற மாவட்டங்களில் நம்ம ஊரு திருவிழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.