செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 18 டிசம்பர் 2021 (10:52 IST)

நளினிக்கு பரோல் வேண்டும்… நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தாய்!

ராஜீவ்காந்தி கொலையில் சிக்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை கேள்விக்குறியதாக உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகன் நளினி உள்ளிட்டோரின் விடுதலை குறித்த சட்ட தீர்மானம் ஆளுநர் வசம் உள்ளது. அதுகுறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நளினிக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் அவருக்கு பரோல் வழங்கவேண்டும் என ஒரு மாதத்துக்கு முன்னர் அவரின் தாயார் விண்ணப்பித்திருந்தார்.

இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கவேண்டும் என மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு டிசம்பர் 20 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.