நயினார் நாகேந்திரன் மகன் ரூ.100 கோடி மோசடி? ஒப்பந்தத்தை ரத்து செய்தது பத்திரப்பதிவுத்துறை
பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி செய்த மோசடி செய்ததாக கூறப்படும் நிலையில் இதுகுறித்த பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பத்திரப்பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் மகன் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்து பதிவு செய்ததாக புகார் எழுந்தது. நயினார் பாலாஜி மீதான மோசடி புகார் குறித்து 15 நாட்களில் நடவடிக்கை எடுக்க அமைச்சர் மூர்த்தி உத்தரவு பிறப்பித்து இருந்தார்,.
இந்த நிலையில் அமைச்சர் உத்தரவின் பேரில், நயினார் பாலாஜி செய்த மோசடி பத்திரப்பதிவு ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக ஸ்ரீநயினார் பாலாஜி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்த நிலையில், மண்டல துணை பத்திரப்பதிவு துறைத் தலைவர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva