வெள்ளி, 31 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified சனி, 18 மார்ச் 2023 (12:23 IST)

தனித்து போட்டி என்பது அண்ணாமலையின் சொந்த கருத்து: நயினார் நாகேந்திரன்

தனித்து போட்டியிடுவது என்பது அண்ணாமலையின் சொந்த கருத்து என பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சற்றுமுன் பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் அதிமுகவுடன் கூட்டணி என்ற முடிவு எடுக்கப்பட்டால் தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஒரு தொண்டனாக கட்சியில் பணியாற்றுவேன் என்றும் தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் தேர்தல் கூட்டணி குறித்து பாஜகவின் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும் என்றும் பாஜக துணை தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 

மேலும் தமிழகத்தில் இதுவரை எந்த கட்சியும் தனித்து போட்டியிட்டது இல்லை என்றும் தனித்து போட்டியிடுவதாக அறிவிக்கவும் முடியாது என்றும் அவர் தெரிவித்தார். பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என அண்ணாமலை கூறிய நிலையில் தனித்து போட்டி இல்லை என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran