திங்கள், 26 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (19:28 IST)

கூட்டணி இல்லை என்று எடப்பாடி சொல்லட்டும் பார்க்கலாம்: நயினார் நாகேந்திரன்

Nainar Nagendran
அதிமுக பாஜக கூட்டணி இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய நிலையில் கூட்டணி இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சொன்னால் தான் ஏற்றுக்கொள்ள முடியும் என்று பாஜக எம்எல்ஏ நயினா நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.  
 
கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தபோது ’இப்போதைக்கு பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்றும் தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். 
 
இதற்கு பதில் அளித்துள்ள நயினார் நாகேந்திரன் அதிமுகவை பொருத்தவரை பொதுச் செயலாளருக்கு தான் முழு அதிகாரம் உண்டு என்றும் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி சொன்னால் தான் ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார் 
 
 ஜெயக்குமார் எந்த சூழ்நிலையில் கூட்டணி இல்லை என்று சொன்னார் என்று எனக்கு தெரியவில்லை என்றும் இதே கருத்தை பொதுச்செயலாளர் பதவியில் இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சொன்னால் தான் ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva