Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரிக்க சிரிக்க பேசி.. சிட்டாய் பறந்த மாப்பிள்ளை! – மணமகள் அதிர்ச்சி!

Written By Prasanth Karthick
Updated: வெள்ளி, 27 நவம்பர் 2020 (11:59 IST)
நாகர்கோவிலில் நடக்கவிருந்த திருமணம் ஒன்றில் கடைசி மணி நேரத்தில் மணமகன் மண்டபத்தை விட்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவிலில் தனியார் மோட்டார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த இளைஞருக்கும், அதே பகுதியை சேர்ந்த பெண் பொறியாளருக்கும் திருமணம் செய்து வைக்க இருவரது பெற்றோரும் பேசி முடித்துள்ளனர். இருவரும் இதற்கு சம்மதிக்கவே தடல்புடலாக நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது. அதை தொடர்ந்து கடந்த 26 அன்று திருமணம் நடத்துவதாக முடிவாகி பத்திரிக்கைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவசர வேலை இருப்பதாக சொல்லி மண்டபத்தை விட்டு வெளியே சென்ற மணமகன் நீண்ட நேரமாகியும் திரும்ப வரவில்லை. இதனால் பதட்டமடைந்த பெண் வீட்டார் மற்றும் உறவினர் மணமகனை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. இந்நிலையில் மணமகன் ஏற்கனவே வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், இந்த திருமணம் பிடிக்காமல் ஓடிவிட்டதுமாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திருமணம் வரை காத்திருந்து மணமகன் ஓடியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

இந்தியா - ரஷ்யா இடையே விரைவில் நேரடி ரயில் பாதை திட்டம்?!..

டேய் டேய் போடா!.. அப்படியே கிழிச்சிட்டாலும்!. கூல் சுரேஷுக்கு சீமான் பதிலடி!...

எங்களை ரோட்ல நிறுத்திட்டீங்க!.. யார் யாரோயோ கோட்டைக்கு அனுப்பிட்டீங்க!. சீமான் கோபம்!..

அமெரிக்காவில் ரூ.1.61 லட்சம் கோடி செலவில் AI சிப் ஆலை!.. எலன் மஸ்க் பிளான் என்ன?..

இந்தியா, சீனாவுக்கு 100 சதவீத வரி!.. அமெரிக்க செனட்டில் நிறைவேறிய மசோதா!..

அடுத்த கட்டுரையில்
Show comments