செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 11 ஏப்ரல் 2022 (08:05 IST)

நாகை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு!

schools
நாகை மாவட்டத்தில் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். 
 
நாகை மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது என்பதும் இந்த மழை காரணமாக சாலைகளில் நீர் தேங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 இதனை அடுத்து நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் வகுப்புகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் அவர்கள் அறிவித்துள்ளார்.