செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2021 (15:32 IST)

பாஜக கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு ?

பாஜக கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் ஆர்ப்பாட்டம். 
 
இரு தினங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றிய பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் நபிகள் நாயகத்தை குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருந்தார். இது சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சைக்குள்ளானது. 
 
மேலும் இஸ்லாமிய மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களிலும் பலரும் கல்யாணராமனை கண்டித்தினர். அன்று இரவே அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 
 
இந்நிலையில் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி உக்கடம் பகுதியில் கோவை மாவட்ட அனைத்து ஜமாத் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் சுமார் 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 
 
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்பை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.