1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 5 மார்ச் 2020 (18:18 IST)

ரஜினியை தொடர்ந்து இஸ்லாமிய தலைவர்கள் கமலுடன் சந்திப்பு!!

பல்வேறு இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்துள்ளனர்.
 
சிஏஏ என்ற குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பேசியதால் இஸ்லாமிய அமைப்பினர்களின் அதிருப்திக்கு ரஜினி ஆளாவார் என எதிர்ப்பார்த்த நிலையில், சமீபத்தில் இஸ்லாமிய அமைப்பின் தலைவர்கள் அவரை சந்தித்து பேசினர். 
 
இந்த சந்திப்பிற்கு பின்னர் ரஜினிகாந்த் சிஏஏ சட்டம் குறித்து முழுமையாக தெரிந்து வைத்திருக்கின்றார் என்றும் இந்த சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர் கண்டிப்பாக குரல் கொடுப்பார் என்றும் இஸ்லாமிய தலைவர்கள் பேட்டி அளித்தனர். 
 
இந்நிலையில், பல்வேறு இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பில் சிஏஏ சட்டத்தில் உள்ள பாதிப்புகள் குறித்து பேசப்பட்டது என தெரிகிறது.