போலீஸ் பாதுகாப்பு கேட்டு ஐகோர்ட் படி ஏறிய முருகதாஸ்!
தனது வீட்டிற்கு போலீச் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரி ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் நஷ்டம் ஏற்பட்டதாக இத்திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ‘தர்பார்’ திரைப்படம் நஷ்டம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் மிகப்பெரிய லாபத்தை அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் கொடுத்திருப்பதாகவும் ஒவ்வொரு திரையரங்கு உரிமையாளர்களும் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் அப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை சந்திக்க முற்பட்டனர். ஆனால், அவரது அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் காவல்துறையினர் விநியோகஸ்தர்களை வெளியேற்றியுள்ளனர்.
இந்நிலையில், தர்பார் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் இழப்பீடு கோரி மிரட்டுவதாக குற்றஞ்சாட்டி காவல்துறையினரின் பாதுகாப்பு கேட்டு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை இன்றே உயர்நீதிமன்றம் விசாரிக்கும் என தெரிகிறது.