புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: சனி, 27 ஜூன் 2020 (23:46 IST)

பலவீனமான பிரதமர் மோடியின் செயலால் கலங்கி நிற்கின்றது - எம்.பி செல்வி ஜோதிமணி

70 ஆண்டு கால இந்திய ராணுவம் உலக அளவில் நான்காவது மிகப்பெரிய ராணுவம் ! பலவீனமான பிரதமர் மோடியின் செயலால் கலங்கி நிற்கின்றது – கரூரில் காங்கிரஸ் எம்.பி செல்வி ஜோதிமணி அதிரடி பேட்டி !

சீனாவுடன் நடைபெற்ற சண்டையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமையில் ஐந்து இடங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து ஒரு மணி நேரம் அஞ்சலி செலுத்தப்பட்டது. கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கரூர் எம்பி ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது.;,  70 ஆண்டு கால இந்திய ராணுவம் உலக அளவில் நான்காவது மிகப்பெரிய இராணுவம் என்றும், தற்போது.,  பலவீனமான பிரதமர் மோடியின் செயலால் இந்திய ராணுவம் கலங்கி நிற்கிறது. உலக அரங்கில் தலைகுனிந்து நிற்கிறது. எல்லையில் எதுவும் நடக்கவில்லை என்று சொன்ன பிரதமர், காங்கிரஸ் கட்சியினரின் வலுவான அழுத்தத்திற்கு பின்னர் தனது கருத்தை மாற்றி கூறினார் என்றும் சுட்டிக்காட்டிய எம்.பி ஜோதிமணி., தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணியை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.  எதிர்க்கட்சிகள் என்ன மருத்துவரா? என்று தமிழக முதல்வர் கிண்டல் செய்கிறார். மூன்று நாளில் குணமாகிவிடும் என்று ஜோசியம் சொல்கிறார். தற்போது எங்களால் முடியாது கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்கிறார்.  95 சதவீத களத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பணியாற்றி வருகிறது. நாங்கள் களத்தில் இல்லாமல் இருந்திருந்தால் மக்கள் மிகப் பெரிய வறுமை பசி பட்டினிக்கு உள்ளாகி இருப்பார்கள்.  ஆனால் ஆளும் அதிமுகவினர் எட்டு கோடி மக்களின் உயிரைப் பற்றி கவலைப்படாமல் ஊழல் செய்வதில் குறியாக உள்ளது.      

எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமான ஆலோசனைகளான,  பரிசோதனையை அதிகரிக்க செய்ய வேண்டும் என்றும், நிவாரணப் பொருட்கள் வழங்க வேண்டும் என்றும், குடும்பத்திற்கு 7,500 ரூபாய் 6 மாதத்திற்கு கொடுக்க வேண்டும் என்றும், அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யவேண்டுமென்றும் வைத்துள்ள கோரிக்கையை அரசு ஏற்கவில்லை.

தற்போது 450 கோடி ரூபாய் குடிமராத்து பணிக்கு ஒதுக்கி உள்ளனர். திமுக, காங்கிரஸ் கூட்டணியினர் பாராளுமன்ற தேர்தலை போல தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். இதனைப் பொறுக்க முடியாமல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எங்களை விமர்சனம் செய்கிறார் இவ்வாறு அவர் கூறினார்.