1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 31 மே 2024 (13:21 IST)

சென்னையில் தாய்ப்பால் விற்பனை செய்த கடைக்கு சீல்! உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை..!

சென்னையில் தாய்ப்பால் விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
தாய்ப்பால் விற்பது சட்டப்படி குற்றம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மாதவரம் பகுதியில் சட்டவிரோதமாக தாய்ப்பாலை பாட்டில்கள் அடைத்து விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் வந்தது
 
இதனை அடுத்து அதிரடியாக அந்த கடையை சோதனை செய்தபோது தாய்ப்பால் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து முத்தையா என்பவருக்கு சொந்தமான அந்த கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் அந்த கடையில் இருந்து 50க்கும் மேற்பட்ட தாய்ப்பால் பாட்டில்களை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது
 
தாய்ப்பால் மற்றும் அதன் தயாரிப்புகளை எந்த ஒரு வணிக நோக்கத்திற்கும் பயன்படுத்த முடியாது என்றும், குழந்தைகளுக்கு மட்டுமே இது கொடுக்கப்பட வேண்டும் என்றும்,  விதிகளை மீறி தாய்ப்பாலை வணிக நோக்கத்திற்காக விற்பனை நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .
 
 
 
Edited by Mahendran