பட்டியலின பெண் சமைத்த உணவை புறக்கணித்த மாணவர்கள்.. கனிமொழி எம்பி நேரில் விசாரணை..!
பட்டியலின பெண் சமைத்த உணவை மாணவர்கள் புறக்கணித்ததாக கூறப்பட்ட நிலையில் திமுக எம்பி கனிமொழி எம்பி நேரில் விசாரணை செய்தார்.
தூத்துக்குடி, விளாத்திகுளம் அருகே பெற்றோரின் வற்புறுத்தலால் காலை உணவை பள்ளி குழந்தைகள் புறக்கணித்தனர். அதேபோல் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பட்டியலின பெண் சமைத்த உணவை மாணவர்கள் புறக்கணித்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் நேரில் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர். பள்ளிக் குழந்தைகள் காலை உணவு சாப்பிடுகிறார்களா? எனவும் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பள்ளி குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து எம்.பி. கனிமொழி காலை உணவை சாப்பிட்டார்.
Edited by Siva