திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 23 டிசம்பர் 2022 (22:57 IST)

பாஜகவில் இணைந்து கொண்ட 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள்

karur
கரூர் தாந்தோணி மலை பகுதியைச் சேர்ந்த காவியத்தமிழன் தலைமையில்  100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு. K.அண்ணாமலை Ex.IPS அவர்களின் கரங்களை வலுப்படுத்தவும், கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் V.V.செந்தில்நாதன்  அவர்களின் தலைமையேற்று, கரூர் தெற்கு மாநகர தலைவர் ரவி, கரூர் மாவட்ட செயலாளர், சக்திவேல் முருகன் அவர்கள் முன்னிலையில்.

கரூர் தாந்தோணி மலை பகுதியைச் சேர்ந்த காவியத்தமிழன் தலைமையில்   100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் ஆறுமுகம், மாவட்ட விளையாட்டு பிரிவு தலைவர் சதீஷ், மாவட்ட ஐடி பிரிவு தலைவர் அருண், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் ரவிச்சந்திரன், கரூர்  மத்திய நகர தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.