செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 14 ஜூன் 2021 (16:41 IST)

39 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! – தமிழக அரசு அதிரடி உத்தரவு!

நேற்று 20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது மேலும் 39 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்து ஒரு மாத காலம் ஆகிவிட்ட நிலையில் பல்வேறு துறைகளிலும் தொடர்ந்து பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று 20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது மேலும் 39 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மனித உரிமை ஆணைய செயலாளராக விஜயகார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். பதிவுத்துறை ஐ.ஜியாக இருந்த சங்கர், காதி கைவினைப்பொருள் ஆணைய சி.இ.ஓ.வாகவும், கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநராக டி.பி.ராஜேஷும், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை இணைச்செயலாளராக எஸ்.பழனிசாமியும், நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் முன்னாள் ஆட்சியர் மேக்ராஜ் நகராட்சி நிர்வாகத்துறை இணை செயலாளராகவும், அறிவியல் நகர துணைத்தலைவராக மலர்விழியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நிதித்துறை இணை செயலாள்ராக அருண் சுந்தர் தயாளன், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநராக ஹரிஹரன், பட்டுப்புழு வளர்ச்சி இயக்குநராக சாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.