வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 14 ஜூன் 2021 (15:21 IST)

விசாரணைக்கு அழைத்த போலீஸ்; கம்பி நீட்டிய பப்ஜி மதன்! – போலீஸ் வலைவீச்சு

ஆன்லைன் கேம் மற்றும் யூட்யூப் சேனலில் பெண்களை கீழ்தரமாக பேசிய விவகாரத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட பப்ஜி மதன் தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளை யூட்யூபில் ஒளிபரப்புவது மற்றும் யூட்யூப் சேனலில் பல வீடியோக்களை வெளியிடுவது என யூட்யூப் பிரபலமாக இருப்பவர் மதன். தனது யூட்யூப் சேனலிலும், ஆன்லைன் விளையாட்டின்போது மதன் தொடர்ந்து பெண்களை கொச்சையான வார்த்தைகளால் பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பலரும் புகார் அளித்த நிலையில் இன்று விசாரணைக்கு ஆஜராக பப்ஜி மதனுக்கு புளியந்தோப்பு சைபர் க்ரைம் போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் காவல் நிலையத்தில் ஆஜராகாத பப்ஜி மதன் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக மதனை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ள போலீஸார் மதனின் யூட்யூப் சேனலை முடக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.