திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 14 ஜூன் 2021 (15:27 IST)

மின்கட்டணம் செலுத்த நாளை கடைசி நாள் !

தமிழகத்தில் கொரொனவில் இரண்டால் அலைத் தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையில், புதிதாகப் பதவியேற்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மின் நுகர்வோர் படும் கஷ்டத்தைப் புரிந்துகொண்டு மின்கட்டணம் செலுத்தும் கால அவகாசத்தை நீட்டித்தது.

எனவே தமிழகம் முழுவதும் தாழ்வழுத்த நுகர்வோர்  மின்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்  மே 10 முதல்  ஜூன் 14 ஆம் தேதிவரை இருக்கும் என்றால் அத்தொகையை ஜூன் 15 ஆம் தேதி வரை செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாளையுடன் அவகாச தேதி முடியவுள்ளதால் மக்கள் இன்று மின்சார வாரியத்தில் வரிசையாக நின்று கட்டணம் செலுத்தி வருகின்றனர்.