Daily Horoscope
✕

தீபம் ஏத்தல!.. இந்து தமிழ்நாட்டில் நான் அடிமை!.. மோகன் ஜி காட்டம்....

Updated: புதன், 25 நவம்பர் 2026 (21:07 IST)
திமுக ஆட்சியில் திருப்பரங்குன்றம் கோவிலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள கல்தூணை தீபத்தூண் எனக்கூறி இந்து அமைப்பினரும், பாஜகவினரும் தீபம் ஏற்ற முயற்சி செய்தனர். ஆனால் திமுக அரசு அனுமதிக்கவில்லை.

தற்போது தவெக ஆட்சி நடைபெற்று வரும் நிலவில் அந்த தூணில் நவம்பர் 24ம் தேதி ஒரு நாள் தீபம் ஏற்றிக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. மதுரை உயர்நீதி நீதிமன்றமும் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், தவெக அரசு அதை செயல்படுத்தவில்லை.. வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது.

மேலும், இந்து மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மற்றும் பாஜகவினரை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. எனவே கோவில் முன்பு அவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அதில் பலரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தவெக அரசின் செயல்பாட்டுக்கு எதிராக  ‘கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் மோகன் ஜி ‘தமிழக அரசே திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று ஆவணமாக வெளியிட்ட பிறகு சாமானியன் என்ன செய்ய முடியும்? இந்துவாக பிறந்த நான் இந்த தமிழ்நாட்டில் அடிமை என ஒத்துக் கொள்கிறேன். பொருளாதாரத்தில் முன்னேறும் வழியை தேடுங்கள் இந்துக்களே. உனக்கு இனி ஐந்து படைதான்.. முதலாம் படையை மறந்துவிடு.. தமிழக முதல்வருக்கு நன்றி’ என பதிவிட்டிருக்கிறார்.<>
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

மீண்டும் மீண்டுமா!.. இந்தியா, சீனா மீது வரி விதிக்க டிரம்ப் திட்டம்...

26 வருடங்களுக்கு பின் மீண்டும் விற்பனைக்கு வரும் Gold Spot குளிர்பானம்...

மனிதர்கள் 1400 வருடங்கள் வாழ முடியுமா?.. ஆக்ஸ்போர்டு பேராசியர் கணிப்பு...

உதயநிதி பேசிய வீடியோவை டெலிட் பண்ணுங்க.. ஆக்சன் எடுங்க.. நீதிமன்றம் காட்டம்....

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம்!.. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு அமைப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments