1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (09:03 IST)

சமூக நீதிக்காக போராடியவர் எங்கள் மோடிஜி: பிரபல நடிகை டுவிட்

சமூக நீதிக்காக போராடிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் சமூகநீதி நாள் கொண்டாடப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று சட்டமன்றத்தில் தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு பாஜக உள்பட அனைத்து கட்சிகளின் எம்எல்ஏக்களும் வரவேற்பளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இதுகுறித்து நடிகையும் பாஜக பிரபலமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: 
 
சமூக நீதிக்காக போராடியவர்கள் ராமானுஜம், வள்ளலார், சுவாமிநாதன் ஐயர், நாராயண குருவின் உத்வேகமாக இருந்த அய்யா வைகுண்டர். நாராயண குரு ஈவிஆருக்கு உத்வேகம் இருந்தார், இப்படி பல தலைவர்கள் இருக்கிறார்கள். 
 
எனவே வரலாற்றை மாற்றவோ அல்லது வரலாற்றை அழிக்கவோ நாம் திட்டமிடக்கூடாது. குறிப்பாக 2017 முதல் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும் மற்றவர்களுக்கும் அரசியல் சாசன உரிமைகளைக் கொண்டு வந்த சிறந்த தலைவர் எங்கள் நரேந்திர மோடி ஜீ. மோடி ஜீ மட்டுமே இந்த அரசியலமைப்பு சட்டம் நடைமுறை கொண்டு வந்தார். நாம் அதய் மறந்துவிடு கூடாது
 
பெருந்தலைவர் காமராஜர் சமத்துவத்திற்காக எப்போதும் நின்றார் மற்றும் 1950‘s சமூக நீதிக்காக போராடினார்