புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 6 செப்டம்பர் 2021 (12:30 IST)

சமூகநீதி நாள் - அட்சேபனை இல்லாமல் வரவேற்ற பாஜக!

பெரியரின் பிறந்தநாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என நயினார் நாகேந்திரன் பேச்சு. 
 
தமிழகத்தில் பெரியரின் பிறந்தநாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று சட்டமன்ற கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியாவில் சமூகநீதி கருத்தாக்கம் பரவ முக்கிய முன்னொடியாக விளங்கியவர் பெரியார். அவரது குருகுலத்திலிருந்துதான் திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகள் மலர்ந்தன. 
 
பெரியாரின் எழுத்துகளும், செயல்பாடுகளும் யாராலும் செய்ய முடியாதவை. அவரது பிறந்தநாளான செப்டம்பர் 17 தமிழக அரசு சார்பில் சமூக நீதி தினமாக கொண்டாடப்படும். சமூக நீதி தினத்தன்று தலைமை செயலகம் தொடங்கி அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். 
 
இதனைத்தொடர்ந்து இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் பெரியரின் பிறந்தநாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. கடவுள் நம்பிக்கையுடன் உள்ள பாஜக இந்த அறிவிப்பை வரவேற்கிறது என தெரிவித்தார்.