ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 31 மே 2024 (17:23 IST)

குமரியில் மோடி.. பத்ரிநாத்தில் ரஜினி.. டிரெண்டிங்கில் இரண்டு காவிகள்..!

பிரதமர் மோடி இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் காவி உடை அணிந்து தியானம் செய்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவின் வடகோடியில் உள்ள பத்ரிநாத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காவி உடையில் தியானம் செய்யும் புகைப்படங்கள் ட்ரெண்டிங்கில் வருகின்றன. வடக்கில் ரஜினியும் தெற்கில் மோடியும் ஒரே நேரத்தில் தியானத்தில் ஈடுபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எந்த கட்சியிலும் சாராமல் இருந்தாலும் அவர் பாஜக ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. பாஜக தலைவர்கள் அடிக்கடி அவரை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் 2026 ஆம் ஆண்டு மீண்டும் அரசியலுக்கு வர வாய்ப்பு உண்டு என்றும் குறைந்தபட்சம் பாஜகவுக்கு ஆதரவாக குரல் கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் ஒரே நேரத்தில் வடக்கில் ரஜினியும், தெற்கில் மோடியும் காவி உடை அணிந்து தியானம் செய்யும் புகைப்படங்கள் தனித்தனியாக சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வரும் நிலையில் இது குறித்த கமெண்ட்களை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran