அதிமுக தலைவர் மோடி, செயலாளர் அமித்ஷா: திருமாவளவன்
அதிமுக தலைவராக மோடியும் மதிமுகவின் செயலாளராக அமித்ஷாவும் செயல்பட்டு வருகின்றனர் என திருமாவளவன் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த சில ஆண்டுகளாகவே அதிமுகவையும் தமிழக அரசையும் வழி நடத்தி வருவது பாஜகதான் என்று ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மத்திய அரசு அமல்படுத்தும் எந்த திட்டத்தையும் தமிழக அரசும் அதிமுக தலைவர்களும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதே இந்த குற்றச்சாட்டுக்கு காரணமாக இருந்து வருகிறது
அதிமுக தலைவர் மோடி, செயலாளர் அமித்ஷா: திருமாவளவன்
இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத பாஜகவுக்கு 20 தொகுதிகளுக்கும் மேல் ஒதுக்கி உள்ளதாகக் கூறப்படுவதை பார்க்கும்போது இந்த குற்றச்சாட்டு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் தமிழகத்தில் அதிமுக தலைவராக பிரதமர் மோடியும் பொதுச்செயலாளராக உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் செயல்பட்டு வருகின்றனர் என்றும் வாடிப்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது