Daily Horoscope

சேராத கூட்டாம், தீராத கவலையில் கமல்! – காத்துவாங்கும் மநீம ஆண்டு விழா!

Written By Prasanth Karthick
Updated: ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (12:50 IST)
மக்கள் நீதி மய்யத்தின் 4ம் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் கூட்டம் வராததால் மய்யத்தார் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி மூன்று ஆண்டுகள் நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில் நான்காம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாட சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சுமார் 8 ஆயிரம் பேர் வருவார்கள் என ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் 3 ஆயிரம் பேர் கூட நிரம்பாததால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சிகள் 10 மணிக்கே தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இருக்கைகள் நிரம்பாததால் 11 மணியாகியும் கமல்ஹாசன் கேரவனில் காத்துக் கொண்டிருந்துள்ளார். எதிர்பார்த்த அளவு கூட்டம் வராததால் கமல்ஹாசன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

எல்லாம் காட்டு

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

தமிழகத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு...

அடுத்த கட்டுரையில்
Show comments