வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (16:02 IST)

தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்ஏக்கள் கடிதம்.! எதற்காக தெரியுமா..?

sathyapradha
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர். 
 
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி முடியும் வரை அமலில் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
 
இதன் காரணமாக தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகங்கள், நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் அனைத்து சீல் வைத்து மூடப்பட்டு உள்ளது.
 
இந்நிலையில் தேர்தல் நிறைவடைந்த நிலையில் அனைத்து அலுவலகங்களையும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு இ-மெயில் மூலம் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். 

 
அந்த மனுவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகங்களை திறக்க வேண்டும் என்று அவர்கள் தலைமை தேர்தல் அதிகாரிக்கு கோரிக்கை வைத்தனர். எம்.எல்.ஏ.க்கள் மனுக்கள் மீது ஓரிரு நாளில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.