1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 மே 2021 (10:37 IST)

போர்களத்திற்கு இணையான இடத்தில் உதவுகிறீர்கள்! – செவிலியர்களுக்கு முதல்வர் வாழ்த்து!

இன்று உலக செவிலியர் தினம் கொண்டாடப்படும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவிலியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை பரவத் தொடங்கியுள்ள நிலையில் மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். அதிகமான நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் குறைவான மருத்துவர்கள், செவிலியர்களே உள்ளனர். இந்நிலையில் இன்று உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது.

இதுகுறித்து வாழ்த்து செய்தி பகிர்ந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “கொரோனா பேரிடர் காலம் போர்க்களத்திற்கு இணையானதுதான். இக்களத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் துணை நிற்கும் அனைத்து செவிலியர்களின் நலன்களும் உரிமைகளும் காக்கப்படும் என உறுதியளிக்கிறேன். இருபால் செவிலியர்களுக்கும் நன்றி கலந்த உலக செவிலியர் தின வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.