1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 30 அக்டோபர் 2020 (08:45 IST)

இதை செய்ய இவ்ளோ நாளா? பரவாயில்லை வரவேற்கிறேன்! – தமிழக அரசுக்கு ஸ்டாலின் ட்வீட்!

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இன்னமும் ஆளுனரின் ஒப்புதல் பெறாமல் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த கல்வி ஆண்டிலேயே இட இதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வந்தன.

இதனால் தற்போது தமிழக அரசு இந்த தீர்மானத்தை அரசாணையாக வெளியிட்டு நிறைவேற்ற முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “7.5% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்புக்குரியது! இதற்கு ஏன் 45 நாட்கள் தாமதம்? ஏன் கிடப்பில் போட்டார்கள்? எதனால் திமுக போராட வேண்டியிருந்தது? அரசாணையை இந்த ஆண்டே அமல்படுத்த, உடனடியாக கவுன்சிலிங் தேதிகளை அறிவித்து மாணவர் சேர்க்கையைத் தொடங்கிடுக!” என தெரிவித்துள்ளார்.