வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 7 ஜூலை 2021 (10:43 IST)

தமிழ்நாட்டில் 100% தடுப்பூசி போட்ட ஒரே கிராமம்! – வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை 100% போட்டுக்கொண்ட காட்டூர் கிராமத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில் ஆட்சிக்கு வந்த திமுக முழு ஊரடங்கை அமல்படுத்தியதுடன், தடுப்பூசி செலுத்துவதையும் தீவிரமாக நடைமுறைப்படுத்தியது. பொதுமக்கள் பலரும் பல இடங்களில் முகாம்கள் மூலமாக ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் உள்ள மொத்த மக்களும் வெற்றிகரமாக முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். தமிழகத்திலேயே 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக் கொண்ட கிராமமான காட்டூரை வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு சான்றிதழ்களை வழங்கியுள்ளார்.