1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By sinoj
Last Modified: புதன், 7 ஜூலை 2021 (00:24 IST)

வாஸ்துப்படி அக்னி மூலையில் எது இருக்க கூடாது?

நாம் வாஸ்து படி வீடு கட்டினால் தான் அந்த வீடு அழகும் அம்சமும் அமைந்த வீடாய் அமையும். நேற்று நாம் கன்னிமூலையைப் பற்றி பார்த்தோம். இன்று அக்னி மூலையைப் பற்றி பார்ப்போம்.
 
அதாவது கன்னி மூலைக்கு நேர் கிழக்கே உள்ளது அக்னி மூலை. அதாவது வாஸ்துப்படி சொன்னால் தென் கிழக்கு உள்ளது. அக்னி என்ற பெயரைக் கண்டதுமே  அனைவருக்கும் தெரியும். அது என்னவாக இருக்கும் என்று. அக்னி என்பதற்கு நெருப்பு என்று பொருள். இப்படிப்பட்ட நெருப்பு எரிகின்ற சமையலறையை நாம் தென்  கிழக்கில் தான் வைக்க வேண்டும். அப்பொழுது தான் அக்னி தேவி நம் வீட்டில் நமக்கு எந்த ஒரு பாதிப்பையும் தராமல் பாதுகாப்பாக நம் வீட்டை காப்பாள்.
 
தென் கிழக்கு மூலையில் சமையல் அறை இருப்பதுதான் நல்லது. மேலும் இந்த தென் கிழக்கு மூலையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அந்த இடத்திற்கு சம்பந்தமான பெண்களின் உடல்நிலை பாதிப்பிற்கு உள்ளாகும் என்று நம்பப்படுகிறது.
 
எனவே தென் கிழக்கு மூலையின் கட்டட அமைப்பில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுவர். மேலும் இந்த அறையில் காலை சூரிய  ஒளி படுமாறு இந்த அறையின் கட்டிட அமைப்பு இருந்தால் குடும்பத்திற்கு நல்லதாம்.
 
தென்கிழக்கு மூலையை - அக்னி மூலை என்று அழைப்பர்.  இந்த மூலையில் எதெல்லாம் வைக்கலாம், எதெல்லாம் வைக்கக் கூடாது என்று பார்ப்போம்.
 
வீட்டின் அக்னி மூலையில் மின்சாதனங்களை வைக்கலாம். பூஜை அறை தென்கிழக்கு மூலையில் அமைக்கலாம். அக்னி மூலையில் குடிநீர், நிலைப்பேழை, கழிவறை, குளியலறை இருக்கக்கூடாது.
 
அக்னி மூலையில் சமையலறை அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்க முடியாமல் போனால் கிழக்கு முகமாக அமைக்கலாம் அல்லது அடுப்பு, எரிவாயு  போன்றவை இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம்.
 
கிணறு, செப்டிக் டேங்க், துணி துவைக்கும் கல் போன்றவை அக்னி மூலையில் இருக்கக்கூடாது. உள்மூலை படிக்கட்டு தென்கிழக்கு மூலையில் வரக்கூடாது.
 
வீட்டிலோ அல்லது தொழில் செய்யும் நிறுவனங்களிலோ தென்கிழக்கு மூலை பாதிக்கப்பட்டால் அந்த இடத்தில் இருப்பவர்களின் உடல்நிலை, மனநிலை கட்டாயம்  பாதிப்படையும், எனவே அக்னி மூலையை கவனத்தில் வைத்துக் கொண்டு அமைப்பது நல்லது.