செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 11 டிசம்பர் 2021 (11:29 IST)

நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா..! – பாரதியார் பிறந்தநாளில் முதல்வர் ட்வீட்!

சுதந்திர போராட்ட வீரரும், தமிழ் கவியுமான மகாகவி பாரதியாரின் 140வது பிறந்தநாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்குறித்து பதிவிட்டுள்ளார்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றவர்களில் ஒருவர் மகாகவி பாரதியார். சுதந்திர போராட்ட கருத்துகளை தனது பாடல்கள் வழியே பாமர மக்களையும் சென்றடைய செய்தவர் பாரதியார். இன்று அவரது 140வது பிறந்தநாளில் பலரும் அவர் குறித்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாரதியார் குறித்து பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா! திறம்பாட வந்த மறவன்! அறம்பாட வந்த அறிஞன்! படரும் சாதிப் படைக்கு மருந்தாம் மகாகவி பாரதியாரின் 140-ஆவது பிறந்தநாள் இன்று! தமிழுக்குத் தொண்டுசெய்த அப்பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும்!” என்று தெரிவித்துள்ளார்.