1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 8 டிசம்பர் 2021 (15:15 IST)

ராணுவ விமான விபத்து: கோவை விரைகிறார் முதல்வர்!

கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்டன் மையத்திற்கு ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சென்ற போது காட்டேரி மலைப்பாதை பகுதியில் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான  Mi-17V5 ரக ஹெலிகாப்டர் குறைந்த தொலைவில் வீரர்களையும் ஆயுதங்களையும் ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படுகிறது. 
 
இதில் 36 பேர் வரை பயணிக்கலாம். ரஷ்யாவில் வடிவமைக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர் 4 டன் எடை  வரையிலான சரக்குகளை கையாளும் திறன் கொண்டதாகும். மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரில் 11 பேர் விபத்தில் உயிரிழந்திருப்பதாகவும், காயமடைந்தவர்கள் வெலிங்டன் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த விபத்து தொடர்பாக  மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை உயரதிகாரிகளுடன் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் விபத்து குறித்த விவரம் அறிய மாலை 5.00 மணியளவில் கோவைக்கு செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.