புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 22 பிப்ரவரி 2021 (14:26 IST)

வழக்கம்போல திரைமறைவு பேரங்கள் நடந்திருக்கு! – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் நாராயணசாமி ஆட்சி கலைக்கப்பட்டதற்கு பின்னால் சதி நடந்திருப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்களும் திமுகவின் 1 எம்.எல்.ஏவும் ராஜினாமா செய்த நிலையில் பெரும்பான்மை இழந்த நாராயணசாமி ஆட்சி கலைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆட்சி கலைப்பு குறித்து மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர் “திரைமறைவு பேரங்கள் - ஜனநாயகப் படுகொலையை இலட்சியமாகக் கொண்ட மத்திய பா.ஜ.க அரசு அதனைப் புதுச்சேரியிலும் அரங்கேற்றியிருக்கிறது - அதிகார துஷ்பிரயோகம் இது! ஜனநாயகம் காப்பதில் முதலமைச்சர் நாராயணசாமியின் துணிச்சலை வாழ்த்துகிறேன். திமுக - காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்!” என தெரிவித்துள்ளார்.