அதிமுக, பாஜகவுக்கு மக்கள் தண்டனை குடுப்பாங்க! – ராஜினாமா செய்த நாராயணசாமி!
Prasanth Karthick|
Last Modified திங்கள், 22 பிப்ரவரி 2021 (12:29 IST)
புதுச்சேரியில் பெரும்பான்மை இழந்ததால் பதவியை ராஜினாமா செய்த நாராயணசாமி பாஜகவுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள் என கூறியுள்ளார்.
புதுச்சேரி சட்டமன்றத்தில் ஆளும் காங்கிரஸின் 5 எம்.எல்.ஏக்கள், கூட்டணியான திமுக எம்.எல்.ஏ ஒருவர் உள்ளிட்ட 6 பேர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாததால் நாராயணசாமியின் தலைமையிலான சட்டப்பேரவை கலைக்கப்பட்டது.
இந்நிலையில் ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜனிடம் நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ராஜினாமா கடிதத்தை ஆளுனரிடம் அளித்துள்ளேன். இனி அவர்தான் முடிவெடுக்க வேண்டும். திட்டமிட்டு ஆட்சியை கலைத்த என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜகவை மக்கள் சும்மா விட மாட்டாங்க.. தக்க தண்டனை கொடுப்பாங்க” என கூறியுள்ளார்.