திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 14 அக்டோபர் 2021 (13:56 IST)

மனசாட்சியே எதிர்கட்சி, மக்களே எல்லாவற்றுக்கும் சாட்சி! – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான மாவட்ட மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் திமுக கூட்டணி 138 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் பேசிய அவர் “எதிர்கட்சியே இல்லாத ஆளும்கட்சி என்ற அகங்காரம் எனக்கு என்றைக்குமே கிடையாது. மக்கள் பணியில் மனசாட்சியே நமக்கு எதிர்கட்சி. தோழமை கட்சிகளின் கோரிக்கைகள், பத்திரிக்கைகளின் விமர்சனங்கள், சமூக வலைதளங்களில் சாதாரண மனிதர்களின் பார்வைகள், பதிவுகள் ஆகியவையும் எதிர்கட்சி பணிதான். இவற்றையெல்லாம் மனதில் கொண்டு மக்கள் பணியை தொடர்ந்து அரசு மேற்கொள்ளும்” என தெரிவித்துள்ளார்.