மத்திய அரசுடன் இணைந்து மினி ஆக்ஸிஜன் நிலையங்கள்! – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழகத்தில் மத்திய அரசுடன் இணைந்து கொரோனா தடுப்பு பணிகளுக்காக மினி ஆக்ஸிஜன் நிலையங்கள் அமைக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் புதியதாக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பலரும் நிதியளித்து வருகின்றனர். இந்நிலையில் முதன்முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி இடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த காணொலி வழியான ஆலோசனை நடந்தது.
இந்நிலையில் இன்று தொழில்துறையினருடனான ஆலோசனை கூட்டத்தில் பேசியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுடன் இணைந்து தமிழகம் முழுவதும் 142 மினி ஆக்ஸிஜன் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், தமிழகத்திற்கு 3.5 கோடி தடுப்பூசிகள் வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.