ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 18 மே 2021 (23:56 IST)

இந்தியாவில் டி-20 உலகக் கோப்பை ? பிசிசிஐ ஆலோசனை

கொரொனா இரண்டாம் அலை பரவலால் இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல்-14 வது சீசன் –போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில் இந்தியாவில் கொரொனா தொற்று மேலும் அதிகரித்துவரும் நிலையில்  டி-20 உலகக் கோப்பை நடத்துவது குறித்து வரும் மே 29 ஆம் தேதி இதுகுறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்தவுள்ளது.

இந்தியாவில்தான் டி-20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. ஆனால் இந்தக் கொரொனா அலைப் பரவலால் எப்போது போட்டிகள் நடைபெறும் எனத் தெரியவில்லை. ஒருவேளை இங்கு போட்டிகள் நடைபெறாவிடில் வெளிநாட்டில் போட்டிகள் நடைபெறலாம் என தெரிகிறது. வரும் மே 29 ஆம் தேதி நடைபெறவுள்ள பிசிசிஐக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.