Daily Horoscope
✕

தேவைப்பட்டால் முழு ஊரடங்கு நீட்டிப்பு? – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Written By Prasanth Karthick
Updated: புதன், 26 மே 2021 (11:09 IST)
தமிழகத்தில் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காய்கறி, மருந்து, மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து மற்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஊரடங்கு குறித்து பேசியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ”தமிழகத்தில் ஊரடங்கிற்கு பிறகு கொரோனா பரவல் குறைந்திருக்கிறது. திமுக ஆட்சியமைத்ததிலிருந்து தமிழகம் முழுவதும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்துதல் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்ஸிஜன் வசதி தட்டுப்பாடு இல்லாமல் உள்ளது. தேவைப்பட்டால் முழு ஊரடங்கை நீட்டிக்க சட்டமன்ற குழு ஆலோசனை அளித்துள்ளது. தேவைப்பட்டால் முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

வாட்ஸ்அப் மெசேஜை இனி ஷெட்யூல் செய்தும் அனுப்பலாம்.. 10 நிமிடம் முதல் 2 வாரங்கள் வரை ஷெட்யூல் செய்ய வசதி...

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழை.. வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதா?

ஃப்ளைதுபாய் விமான கவிழ்ப்பு சதி. மாலத்தீவை சேர்ந்த 2 விமானிகள் கைது.. அதிர்ச்சி தகவல்...

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் 3 தலைவர்கள் கைது.. சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு..

அமைச்சர், எம்.பி பதவிகள் ராஜினாமா!.. எல்.முருகன் அதிரடி முடிவு..

அடுத்த கட்டுரையில்
Show comments