வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 29 மே 2019 (13:45 IST)

உதயநிதிக்கு கட்சியில் பதவி; முட்டுக்கட்டை போட்ட ஸ்டாலின்: என்னவா இருக்கும்...?

உதயநிதி ஸ்டாலினை இளைஞர் அணி செயலாளராக நியமிக்குமாறு கட்சியை சேர்ந்த பலர் கேட்டுக்கொண்டும் இதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளாராம் ஸ்டாலின். 
 
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டச்சபை தேர்தலில் திமுக அமோக வெற்றியை பெற்றது. எனவே, திமுக தலைவர் ஸ்டாலின் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்று மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். 
 
அப்போது மாவட்ட செயலாளர்கள் உதயநிதியின் பிரச்சாரத்தை புகழ்ந்து பேசினராம். மேலும், அவரை திமுக இளைஞர் அணி செயலாளராக நியமிக்கும்படி விருப்பம் தெரிவித்துக்கொண்டனராம். 
ஆனால், திமுகவில் எந்த பொறுப்பிலும் இதுவரை இல்லாத உதயநிதியை எடுத்தவுடன் இளைஞர் அணி செயலாளர் ஆக்குவது என்பது சரியான முடிவாக இருக்காது என ஸ்டாலின் கருதுகிறாராம். 
 
கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள் என்னும் காரணத்திற்கு அவசரப்பட்டு தேர்தலில் ஜெய்த்ததும் வாரிசு அரசியல் என்ற பெயரை மக்கள் மத்தியில் வாங்க வேண்டாம் என ஸ்டாலின் கருதுவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.