Daily Horoscope
✕

நாங்க குற்றம் செய்திருந்தா கேஸ் போட வேண்டியதுதானே? – அதிமுகவுக்கு ஸ்டாலின் கேள்வி!

Written By Prasanth Karthick
Updated: ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (14:34 IST)
திமுகவினர் ஆட்சியில் ஊழல் நடந்ததாக அதிமுக நாளேடுகளில் விளம்பரம் அளித்துள்ளது குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சார பணிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. இந்நிலையில் இன்றைய தினசரி நாளிதழ்களின் முதல் பக்கத்தில் திமுக மீது பலவகையான குற்றச்சாட்டுகள், புகார்கள் உள்ளதாக சுட்டிக்காட்டி அதிமுக வெளியிட்டுள்ள விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதிமுகவின் விளம்பரம் குறித்து கேள்வி எழுப்பி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின் “தோல்வி பயத்தால் பொய்யான குற்றச்சாட்டுகளை நாளிதழ்களில் 4 பக்க விளம்பரமாக அதிமுக வெளியிட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது யார்? வழக்கு போட்டிருக்கலாமே? குற்றம் என்றால் நிரூபித்திருக்கலாமே? இந்தக் கேள்விகளைக் கேட்கும் தெளிவு கொண்டவர்கள்தான் தமிழக வாக்காளர்கள்.” என கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

கூட்டணியை விட்டு போக சொன்னதே ஸ்டாலின்தான்!.. திருமாவளன் இப்படி சொல்லிட்டாரே!...

இந்து சமய அறநிலையத்துறை பெண் ஊழியர்களுக்கு 1 வருடம் மகப்பேறு விடுப்பு.. அதிரடி உத்தரவு...

இனி எல்லா சனிக்கிழமையும் சார்பதிவாளர் அலுவலகங்கள் விடுமுறை.. பணிச்சுமை குறையுமா?

நவம்பர் 13க்கு அப்புறம் எப்ப வேணும்னாலும் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டி வரும்.. விஜய்யின் திட்டம் என்ன?

விஜயை நான் அப்படி பேசியிருக்கக் கூடாது!.. திருமாவளவன் ஓப்பன்...

அடுத்த கட்டுரையில்
Show comments