செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 27 மே 2021 (13:15 IST)

தடுப்பூசி ஆலை குத்தகைக்கு வேண்டும் – மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் தடுப்பூசி உற்பத்திக்காக ஆலையை குத்தைகக்கு கேட்டு முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் பாதிப்பு நிலவரம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி பங்கீடு செய்வதிலும் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் மாநில அரசுகள் தடுப்பூசிகளுக்கான உலகளாவிய டெண்டரை கோரி வருகின்றன.

இந்நிலையில் தற்போது பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ”கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி ஆலையை தமிழகத்திற்கு குத்தகைக்கு வழங்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.